Friday, July 19, 2019

ஆன்மிகம் : Subash Krishnasamy

Credits : https://www.facebook.com/voiceofsubashkrishnasamy
Original content from : https://www.facebook.com/voiceofsubashkrishnasamy/posts/2402044279863237

ஆன்மிகம் என்பதே நாம் காண்பதும் உணர்வதுமான அனைத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய கண்ணோட்டமே!

அதை சிருஷ்டி என்பது ஆன்மிகம். ஆதாவது இத்தனைக்குமான அடிப்படை மூலமாக ஒரு சக்தி இருந்து இத்தனையையும் ஒழுங்குமுறையில் இயக்குகிறது. அதுதான் இறைவன் என்று சொல்கிறது!

ஆனால் இத்தனையும் ஒரு எல்லையில்லாப் பேரியக்கமும் அதனுள் அடங்கிய எண்ணற்ற வகையிலான இயக்கக்கூறுகளுமே என்கிறது நாத்திகம்.

அனைத்துமான பரமாத்மா அதனுள் அடங்கிய ஜீவாத்மாவாகிய நம்மை ஆட்டுவிப்பதால் உயர்தர்ம நெறிகளில் நின்று வாழ்ந்து பரமாத்மாவுடன் ஐக்கியமாவதே நம் கடமை என்கிறது ஆன்மிகம்!

ஆனால் பேரியக்கமும் உள்ளியக்கக்கூறுகளுமாக இயங்கும் அண்டத்தில் பூமியும் உயிரினங்களும் ஒரு இயக்கக்கூறே!

அதில் பரிணாம வளர்ச்சியால் முக்காலமும் பற்றி சிந்திக்கத் தெரிந்த இனமாகிய மனிதன் சக மனிதருடனும் சக உயிரினங்களுடனும் இயற்கையுடனும் இணக்கமாகவும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் உணர்வுகளுடன் உன்னத வாழ்வு வாழ்வதே வாழ்க்கை என்கிறது நாத்திகம்!

இந்த இரண்டு கண்ணோட்டங் களையும் மறுக்க முடியாது.

அதனால் என்னுடைய ஆன்மிகம் இந்த இரு கண்ணோட்டங்களையும் மறுப்பது இல்லை.

அண்டபேரண்டமான அனைத்துமானது பரம்பொருள்...

அதனுள் அடங்கியுள்ள உயிருள்ள உயிரற்ற அனைத்தும் அந்தப் பரம்பொருளின் உட்கூறுகள்...

அவை ஒவ்வொன்றும் ஒன்று இன்னொன்றாக ஓயாமல் மாறிக்கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக உயிருள்ளது உயிரற்றதாகவும் உயி ற்றது உயிருள்ளதாகவும் ஓயாமல் மாறிக்கொண்டுள்ள ஒரு கிரகத்தில் வாழ்ந்துகொண்டுள்ளோம்.

எதுவும் நிலையானது அல்ல.

அதனால் பரம்பொருளின் உட்கூறுகளில் ஒன்றான நாம் சக மனிதருடனும் சக உயிரினங்களுடனும் முரண்பட்டுப் போராடி அமைதியற்ற வாழ்வு வாழ்வதைவிட அனைவரையும் அனைத்தையும் நேசித்து அனைத்துக்கும் உதவி வாழ்வதே பரம்பொருளாகிய இறைவனுக்கு இணக்கமான வாழ்க்கை!

ஒன்றைப் படைக்கவும் தண்டிக்கவும் அன்பைப் பொழியவும் வெறுப்பை வளர்க்கவும் வேடமிடவும் 
இறைவன் மனித குணம் படைத்த அந்நியன் அல்ல.

இறைவன் வேறு நாம் வேறு அல்ல.

நாம் இறைவனின் ஒரு அங்கம்!

நமது சிறப்பே, நாம் பின்பற்றும் அனைவருக்கும் பொருந்தும் உயர்தர்ம நெறிகளே இறைவனுடைய அங்கமாக நாம் அளிக்கும் பங்களிப்பு!

இதுதான் எனது ஆன்மிகம்!